அடங்க மறு திரைவிமர்சனம்:
திரைவிமர்சனம்:
திரைப்படம் வெளியிட் டு தேதி:21-12-2018
![]() |
இசை:சாம் சி.எஸ் |
![]() |
இயக்குநர் :கார்த்திக் தங்கவேல் |
![]() |
தயாரிப்பு : சுஜாதா விஜயகுமார் |
காவல் துறையின் உதவியுடனேயே 'ஆதாரம் இல்லை' எனக் குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க முடியாத காவல் துறை அதிகாரி ஒருவர், பணியில் இருந்து விலகி அதே பாணியில் ஆதாரம் இல்லாமல் அத்தனைபேரையும் தண்டிப்பதே, 'அடங்க மறு'!
காவல் துறை அதிகாரி, ஜெயம் ரவி. இளம்பெண் ஒருவரது கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து செல்லில் அடைக்க, அதிகார பலமும், பண பலமும் பொருந்திய அந்தக் குற்றவாளிகள் அனைவரும் எளிதாக வெளியே வருகிறார்கள். ஜெயம் ரவியைப் பழிவாங்க அழகான அவரது குடும்பத்தை வில்லன் கும்பல் எரித்துக் கொல்ல, வேலையை விட்டுவிட்டு குற்றவாளிகளை வேட்டையாடக் கிளம்புகிறார், ரவி.
காவல் துறையில் பணியாற்றிய அனுபவத்தையும், தனது டெக்னாலஜி மூளையையும் பயன்படுத்தி, உண்மைக் குற்றவாளிகள் அத்தனைபேரையும் ஆதாரம் இல்லாமல் எப்படி அழித்தார் என்பதே மீதிக் கதை.
போலீஸ் அதிகாரிகளைக் கம்பீரமாகக் காட்டும் படங்களின் பட்டியல் நீளம். ஆனால், அவர்களின் தடுமாற்றங்களைக் காட்டும் படங்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அதில், 'அடங்க மறு'வும் ஒன்று. புது எஸ்.ஐயாக ஜெயம் ரவி தடுமாறும், அவமானப்படும் காட்சிகளும் சரி, அழகம் பெருமாளின் காட்சிகளும் சரி... நிஜத்தைப் பிரதிபலிக்கின்றன.
கொடூர குற்றவாளிகள் என்றால், அவர்களை உடனுக்குடன் கொன்றுவிட வேண்டும் என்ற இயக்குநரின் கோபம், 'அந்த' மொபைல் கேம் மூலமாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment